” அதிஉயர் சபையாகக் கருதப்படுகின்ற நாடாளுமன்றத்திலேயே எதிரணி எம்.பிக்களுக்கு பாதுகாப்பு இல்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
” சபாநாயகர் என்பவர் பக்கச்சார்பற்ற வகையில் செயற்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவரின் பொறுப்பாகும்.
ஆனால் எமக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் சபை அமர்வை புறக்கணித்துள்ளோம். எமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.” – என்றார் வடிவேல் சுரேஷ்.
