எம்.பி. பதவியை இழப்பாரா விஜயதாச? மொட்டு கட்சி பொறி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ள நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.

மொட்டு கட்சியின் அரசியல் குழு நேற்று கூடியது. இதன்போது கட்சியின் ஒழுக்காற்று விசாரணை குழு முன்வைத்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“அரசியல் குழு கூட்டத்தில் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு தேசிய ஏற்பாட்டாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு, தற்போது மற்றுமொரு கட்சியில் இணைந்துள்ள விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஒழுக்காற்று விசாரணை குழு அனுமதி கோரி இருந்தது. அதற்குரிய அனுமதியும் வழங்கப்பட்டது.” – என்றார்.

Related Articles

Latest Articles