எம்.பி. பதவியை துறக்கிறார் முஜிபூர்? மேயர் வேட்பாளராக கொழும்பில் போட்டி!

உள்ளாட்சிமன்ற தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மானை நிறுத்துமாறு கட்சிக்குள் யோசனை முன்வைக்கப்படவுள்ளது. எனினும், இது தொடர்பில் முடிவெடுப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முஜிபூர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தால், அந்த இடத்துக்கு பௌசியே தெரிவாகும் நிலை உள்ளது.

எனினும், பௌசி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சார்பாக செயற்படுவதால், முஜிபூர் ரஹ்மான் பதவி விலகுவதை சஜித் விரும்பவில்லை என தெரியவருகின்றது.

 

Related Articles

Latest Articles