எரிக்கப்பட்ட நிலையில் சிசு சடலமாக மீட்பு! பூனாகலை தோட்டத்தில் கொடூரம்!!

பிரசவமாகி இரு நாட்கள் மதிக்கத்தக்க பெண் சிசுவொன்றின் சடலத்தை, கொஸ்லந்தைப் பொலிஸார் இன்று (10)  மீட்டுள்ளனர்.

பூனாகலைப் பகுதியைச் சேர்ந்த ஆர்னோல்ட் பிரிவு பெருந்தோட்ட குடியிறுப்பொன்றின் பின்புறபற்றைக்குள் எரியூட்டப்பட்டிருந்த பெண் சிசுவே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கிடைக்கப் பெற்ற தகவலொன்றினையடுத்து, குறிப்பிட்ட தோட்டத்திற்கு விரைந்த பொலிஸார் குறிப்பிட்ட குடியிறுப்புப் பகுதியினைச் சூழ மேற்கொண்ட தேடுதலின் போதே,சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மஜிஸ்ரேட் விசாரணையை, பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிபதி கீர்த்தி கும்புறுஹேன மேற்கொண்டார். சிசுவின் சடலத்தை சட்டவைத்திய பரிசோதனைக்கென்று,பதுளை அரசினர் மருத்துவமனை சட்டவைத்திய பிரிவிடம் ஒப்படைத்து, அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் சிசுவின் தாயென கருதப்படும் 28 வயது நிரம்பிய இளம் பெண்ணையும் கைதுசெய்யும்படிவிடுக்கப்பட்ட உத்தரவினையடுத்து, பொலிசார் அப்பெண்ணைகைது செய்து விசாரணைக்குற்படுத்தியுள்ளனர். அப்பெண்ணின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதினால்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிசு இறந்தநிலையில் பிரசவமானதா அல்லதுகொலைசெய்யப்பட்டதாஎன் றுஅறியும் வகையில் தீவிரபுலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles