எரிபொருளை பதுக்கி, அதிக விலைக்கு விற்றவர் கைது!

சட்டவிரோதமாக எரிபொருளை களஞ்சியப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவர், வத்தளை – ஹெந்தல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

71 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

30 லீட்டர் 750 மில்லி லீட்டர் பெட்ரோலுடன் சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Latest Articles