எரிபொருள் நெருக்கடியால், மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள தனியார் பேருந்துகள் கடந்த சில நாட்களாக சேவையில் ஈடுபடவில்லை. இ.போ.ச. பஸ் சேவையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சேவையில் ஈடுபடும் பஸ்களில், அளவுக்கு அதிகமான பயணிகள் பயணிப்பதை காணமுடிகின்றது. சிலர் அச்சுறுத்தலான விதத்தில் பஸ்களில் தொங்கி செல்கின்றனர்.

இன்று மாலை 5 மணிக்கு மஸ்கெலியா நகரில் இருந்து நல்லதண்ணி வழியாக மறே செல்லும் இறுதி அரச பேருந்தில் 200 க்கு மேற்பட்ட பயணிகள் ஏற்றப்பட்ட நிலையில், பேருந்து பயணத்தை ஆரம்பித்த போது பேருந்தின் முன்பக்கத்தில் உள்ள சில்லில் காற்று இறங்க ஆரம்பித்தவேளை, மக்கள் பீதியில் பேருந்தில் இருந்து வேகமாக இறங்கினர்.
