கலேவெல நகரிலுள்ள ஒரேயொரு அரச வைத்தியசாலையான கலேவெல பிரதேச வைத்தியசாலை, எரிபொருள் பிரச்சினை காரணமாக மூடப்படுவதாக மாவட்ட வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்.
கடந்த மூன்று வார காலமாக கலேவெல பிரதேச வைத்தியசாலை ஊழியர்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொடுக்கப்படாமையினால் அவர்களால் கடமைக்கு சமுகமளிக்க முடியாதிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் வைத்தியசாலையை மூடிவிட நேர்ந்திருப்பதாக மாவட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
