பசறை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் நேற்றிரவு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு இன்று அதிகாலை ஒரு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர், எரிபொருள் நிலையத்தில் பெற்றோல் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஊழியர் பெற்றோல், டீசல் இரண்டு நாட்களாக இல்லை என்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
எனினும், தமக்கு எரிபொருள் வேண்டுமென மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வலியுறுத்தியுள்ளனர். ஊழிருடன் தர்க்கத்தில் ஈடுபட்ட அவரை தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான ஊழியர் கூக்குரல் இட்டபோது எரிபொருள் நிரப்பு நிலைய சக ஊழியர்களால் தாக்குதல் மேற்கொண்ட நபர்களில் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு பசறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு தாக்குதலுக்கு உள்ளான 38 வயதுடைய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் பசறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
ராமு தனராஜா