தங்கொட்டுவ மற்றும் வென்னபுவ ஆகிய பகுதிகளில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த 47 மற்றும் 51 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் இரண்டு நாட்களாக டீசல் பெறுவதற்காக தங்கொடுவ நகரில் வரிசையில் காத்திருந்த கோனவில பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவர் சுருண்டு விழுந்த போது தங்கொட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஓட்டும் நபரே மாரடைப்பு ஏற்பட்டமையின் காரணமாக மரணமடைந்துள்ளார்.
இதேவேளை, வென்னபுவ பகுதியில் எரிபொருள் கொள்வனவு செய்ய வரிசையில் காத்திருந்த 51 வயதுடைய மற்றொருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது