எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று முதல் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு இரண்டாயிரம் ரூபாவிற்கும் முச்சக்கர வண்டிகளுக்கு மூவாயிரம் ரூபாவிற்கும் கார்கள் , வேன்கள் மற்றும் ஜீப்வண்டிகளுக்கு எட்டாயிரம் ரூபாவிற்கும் மாத்திரம் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை பஸ்கள் , லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கும் குறித்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.










