எரிபொருள் விலை அதிகரிக்கலாம்

எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு டொலரை பயன்படுத்தினால், அந்நிய செலாவணி இல்லாமல் பெரும் நெருக்கடியை நாடு சந்திக்க நேரிடும் என்று நிதியமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெற்றோல் 35 ரூபாவாலும், டீசல் 24 ரூபாவாலும், மண்ணெண்ணெய் 11 ரூபாவாலும் உடனடியாக அதிகரிக்கப்பட்டு எரிபொருள் தேவையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் கடிதத்திற்கு நிதி அமைச்சு இதுவரை பதிலளிக்கவில்லையென தெரியவந்தது.

Related Articles

Latest Articles