நாட்டில் இன்று காலை 5 மணி முதல் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 366 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 464 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை – 358 ரூபா.
ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 41 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை – 475 ரூபா.
மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 11 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை – 236 ரூபா.
அதேவேளை, வற் வரி திருத்தமும் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.
வற்வரி அறிவிடப்படும் அனைத்து பொருட்களின் விலைகளும் 3 வீதத்தால் அதிகரிக்கப்படும்.
