சௌமியமூர்த்தி தொண்டமான் தேசிய தலைவர்: அவரின் பெயரை வைப்பது தவறு கிடையாது!

“மலையகத்தில் இருக்கின்ற நிறுவனங்களுக்கு தொண்டமானின் பெயரை வைக்ககூடாதென சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். இதனை என்னால் ஏற்க முடியாது. சௌமியமூர்த்தி தொண்டமான் என்பவர் இந்நாட்டின் அடையாளம். ஒரு தேசிய தலைவர், அதனால்தான் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ அப்படியான தேசிய தலைவரின் ஞாபகார்த்தமாக ஏதாவது செய்தால், அவரின் படத்தை வைக்க கூடாது, பெயரை வைக்ககூடாது என கூறுவது சிறுபிள்ளைத்தனமானது.

சௌமியமூர்த்தி தொண்டமானால் மலையக மக்களுக்கு சேவை செய்துள்ளார்.

அவரின் பெயரை வைப்பதில் தவறு இல்லை. ஊழல் நடந்தால் தட்டி கேளுங்கள். பெயர் வைப்பதை விமர்சிக்க வேண்டாம்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles