எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதால், பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் அந்த முடிவை எடுக்கும் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். ஆனால் எரிபொருள் விலை அதிகரிக்காது என்ற விடயத்தை அவர் உறுதியாக கூறவில்லை.










