எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியது ‘லிட்ரோ’!

சமையல் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

நேற்று முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை சமையல் எரிவாயு விநியோகத்தை இவ்வாறு நிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் சரிவாயு அடுப்புகள் வெடித்து சிதறிவருகின்றன. நேற்றும் பல இடங்களில் சம்பவங்கள் பதிவாகின.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே லிட்ரோ கேஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

Related Articles

Latest Articles