எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞர் பரிதாப மரணம்

வடக்கு மாகாணத்தில் எலிக்காய்ச்சல் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.

எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

யாழ். வடமராட்சி – கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 5 நாட்கள் எலிக்காய்ச்சல் நோய் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த மேற்படி இளைஞர், பின்னர் நோயின் தீவிர நிலை உணரப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து வடக்கில் எலிக்காய்ச்சல் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles