இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, மூன்று மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நெடுந்தீவுக்கு அருகில் நேற்றிரவு குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த 11 இந்திய மீனவர்களையும் மயிலிட்டி கடற்றொழில் திணைக்களத்தினூடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
