எல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடு – இளைஞன் காயம்

எல்ல பகுதியில் உள்ள விடுதியொன்றில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில், ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி விடுதியை நோக்கி இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில், விடுதியில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காயம் அடைந்து தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

தொமன்வில மிட்டியாகொட பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு காயம் அடைந்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் செய்த நபர்கள் ஸ்கூட்டி ரக உந்துருளியில் வந்தவர்கள் எனவும் T56 ரக துப்பாக்கியிலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று இரவு 7 .45 மணியளவில் இடம்பெற்றுள்ளது

உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது

இதுவரையிலும் எவரும் கைது செய்யப்படாத போதிலும் மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles