எல்ல பொலிஸ் பிரிவில் காட்டுத் தீ – 5 ஏக்கர் நாசம்

எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினளன் பெருந்தோட்டப் பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவிவருகின்றது.

குறித்த பகுதியில் நிலவும் வரட்சி மற்றும் காற்றுடன் கூடிய காலநிலையினால், காட்டுத் தீ வேகமாகப் பரவி, சுமார் ஐந்து ஏக்கருக்கு மேல் பற்றைப் புல் தரை முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளது.

இப் பற்றைப் புல் தரைப் பகுதியில் அமைந்திருந்த குடிநீர்க் குழாய்கள் பெருமளவில் முற்றாக சேதமாகியுள்ளன.

இத் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விஷமிகளின் செயலாக இருக்கலாமென்றும் கருதப்படுகின்றது.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles