எல்ல ரொக் வனப்பகுதியில் 7 ஏக்கர் நாசம்! தீ வைத்த 16 மாணவர்கள் கைது!!

பதுளை,  எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ல ரொக் வனப்பகுதியில் இன்று மதியம் தீ பபரவியதால் சுமார் 7 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

எனினும்,, தீயை கட்டுப்படுத்த எல்ல பிரதேச செயலகம் இராணுவத்தினரின் உதவியை கோரியுள்ளது.

பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 16 மாணவர்களே தீயை வைத்திருக்கலாம் என எல்ல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய எல்ல பொலிஸாரினால் குறித்த 16 மாணவர்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு  தனராஜ்

Related Articles

Latest Articles