தமிழ், சிங்கள புத்தாண்டு முடிவடைந்த பின்னர் ஏபரல் மூன்றாம் வாரமளவில் தேர்தல் தொடர்பான அறிவித்தலை வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணியினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
இச்சந்திப்பு முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட இராதாகிருஷ்ணன் எம்.பி.,
” வரவு – செலவுத் திட்ட கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. சாதாரணதரப் பரீட்சை நடக்கவுள்ளது. ஏற்கனவே பெறப்பட்ட கட்டுப்பணம் மீள செலுத்தப்படவில்லை. தமிழ், சிங்கள புத்தாண்டும் வருகின்றது.
இதற்கிடையில் தேர்தலை நடத்துவது ஏற்புடையதல்ல. எனவே, பொருத்தமான சூழ்நிலையில் தேர்தலை நடத்துமாறு கோரியுள்ளோம். ஏப்ரல் மூன்றாம் வாரமளவில் வேட்புமனு கோரல் தொடர்பான அறிவித்தலை வெளியிடலாம்.இது பற்றி தேர்தல் ஆணைக்குழு சாதகமான முடிவை எடுக்கும் என நம்புகின்றோம்.” – என்றார்.