அமெரிக்காவின் வரிப்போரால் இலங்கையின் ஏற்றுமதி துறையில் ஏற்படும் வருமான பற்றாக்குறையை, பிற நாடுகளின் சந்தைகள்மூலம் ஈடுசெய்வதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.
ஆசிய வலயம், ஆபிரிக்க நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை பொருட்களுக்கு அதிக கேள்வி இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கமைய மேற்படி நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை செய்துகொள்வதற்குரிய முன்மொழிவுகள், ஏற்றுமதி அபிவிருத்தி சபையால் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வரி விதிப்பால் உலக பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் இலங்கைக்கு நன்மைகளைப் பெறுவதற்குரிய வழிமுறைகள் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என அவர் மேலும் கூறினார்.