ஏ – 9 வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிச்சன்குளம் பகுதியில் வைத்தே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வேன் ஒன்று , வீதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்பகுதியில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மற்றும் மாங்குளம் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் முல்லேரியா புதிய நகரம், வெல்லம்பிட்டிய மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்கள் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் வேனின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










