ஐக்கிய சுதந்திரக் கட்சியானது பொதுத்தேர்தலில் இதொகாவுக்கு ஆதரவளிக்கவில்லை. எனவே, எமது கட்சி இதொகாவுக்கு ஆதரவு என பரப்பட்டுவரும் தகவலை நம்பவேண்டாம் என்று ஐக்கிய சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் சவரியார் ஜேசுதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது முகநூல் பக்க நேரலையில் அவர் கூறியுள்ளவை வருமாறு,
‘எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய சுதந்திரக் கட்சியானது சமநிலக் கட்சியுடன் இணைந்து தபால் உரை சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்றது.
எமது கட்சியின் வேட்பாளர் ஒருவர் மாத்திரமே மற்றுமொரு கட்சிக்கு தாவியுள்ளார். காத்தையா குணாலன் என்பவரே இவ்வாறு இதொகா பக்கம் தாவியுள்ளார்.
இதனை பயன்படுத்தி எமது ஐக்கிய சுதந்திரக் கட்சியானது, இதொகாவுக்கு ஆதரவு என்ற பொய்யான செய்தி இதொகாவால் பரப்பட்டுவருகின்றது. எமது மக்கள் இதனை நம்பக்கூடாது.
ஐக்கிய சுதந்திரக் கட்சியானது இதொகாவுக்கு ஆதரவு இல்லை. ஊழல் வாதிகளுக்கு எமது கட்சி துணைபோகாது. ஊழலை ஒழிப்பதே எமது நோக்கம். நுவரெலியா மாவட்டத்தில் தபால் உரை சின்னத்திலேயே நாம் போட்டியிடுகின்றோம்.” – என்றார்.
