இலங்கையில் பழமையான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கு இம்முறை பொதுத்தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து வெளியேறி சஜித் தலைமையிலான அணியினர் தனித்து போட்டியிடுவதும் இதற்கு பிரதான காரணமாகும்.
இதுவரையில் வெளியாகியுள்ள தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக்கட்சி நான்காம் இடத்தை வகிக்கின்றது. எனினும், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முடிவுகள் வெளிவந்த பின்னர் ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்படக்கூடும் என கூறப்படுகின்றது.
அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் அரசியல் கோட்டையாகக் கருதப்படும் கொழும்பு மாவட்டத்தில் ஒருதொகுதியில்கூட வெற்றிபெறமுடியாத நிலைமையும் காணப்படுகின்றது.1946 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியானது 8 பொதுத்தேர்தல்களில் வெற்றிபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.