ஐக்கிய மக்கள் சக்தியின் ஆண்டு மாநாடு இன்று

சமகி ஜன பலவேகயாவின் (SJB) ஆண்டு மாநாடு இன்று டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.

கட்சியின் மாநாடு பிற்பகல் 01:00 மணிக்கு பொரளையில் உள்ள கேம்பல் பூங்காவில் ஆரம்பமாகும் என SJB கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்தார்

மாநாட்டில் சுமார் 25,000 உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SJB உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் , வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் கட்சியின் பலத்தை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்றார்.

மேலும், எஸ்.ஜே.பி.க்கு ஆதரவாக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான உறுப்பினர்களும் மாநாட்டில் இணைவார்கள் என்றார்.

Related Articles

Latest Articles