” ஐசிசி (சர்வதேச கிரிக்கெட்சபை) என்பது இந்தியாவின் சொத்தாக மாறியுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையையும், தெரிவுக்குழுவையும் இந்தியாதான் நிர்வகிக்கின்றது.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
” உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுடனான ஆட்டத்தில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றும் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணி எதற்காக இந்தியாவுக்கு வழங்கியது? மஹேல ஜயவர்தனதான் அவ்வாறு செய்யுமாறு கூறினார். இதன் பின்னணி என்ன? இவை பற்றியும் ஆராய வேண்டும்.” எனவும் விமல் வலியுறுத்தினார்.
