ஐசிசி T-20 உலகக்கிண்ணம் – நமீபியா, அயர்லாந்து வரிசையில் இலங்கை

ஐ.சி.சி. இருபது ஓவர் உலக கோப்பை 2021 போட்டியில் ஒரே குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஐ.சி.சி. இருபது ஓவர் உலக கோப்பை 2021 போட்டிகள் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளன. பி.சி.சி.ஐ. நடத்தவுள்ள இப்போட்டிகள் வருகிற அக்டோபர் 17 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 14 ஆம் திகதிவரை நடைபெறும்.

இதற்கான அணிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, சூப்பர் 12 பிரிவில் குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டாக அணிகள் பிரிக்கப்பட்டு உள்ளன.

இவற்றில் குரூப் 1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகளும், குரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும் இடம் பெறும்.

இவை தவிர, குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டாக அணிகள் பிரிக்கப்பட்டு உள்ளன. குரூப் ஏ-வில், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகிய 4 அணிகள் இடம் பெறும்.

குரூப் பி-யில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, ஓமன் ஆகிய 4 அணிகள் இடம் பெறும்.

குரூப் ஏ மற்றும் குரூப் பி அணிகளில் வெற்றி பெறும் அணிகள் முறையே குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆகியவற்றில் இடம் பெறும்.

இதேபோன்று, குரூப் ஏ-வில் 2வது இடம் பெறும் அணி குரூப் 2விலும், குரூப் பி-யில் 2வது இடம் பெறும் அணி குரூப் 1லும் இடம் பெறும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles