எதிர்வரும் ஜனவரியில் உருவாக்கப்படவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையில் இடம் பெறுபவர்களின் பெயர் விவரம் அரசியல் வட்டாரங்களில் கசிந்துள்ளது.
ஐதேகவின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, உப தலைவர் ரவி கருணாநாயக்க, உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம், தேசிய அமைப்பாளர் சாகல ரத்னாயக்க, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஆளுநர் நவீன் திஸாநாயக்க, பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார் ஆகியோர் தலைமைத்துவ சபையில் இடம்பிடிப்பார்கள்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் மாற்றம் வரவுள்ளது எனவும், முழுநேர மற்றும் தேர்தல் அரசியலில் ஈடுபடாதவரை அப்பதவிக்கு நியமிப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டுவருகின்றது.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்புடன் அமையவுள்ள கூட்டணியை உருவாக்கும் பொறுப்பு ரவிகருணாநாயக்க, வஜிர அபேவர்தன ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
