ஐயப்பன் யாத்திரை செல்ல இலவச வீசா! -அகில இலங்கை சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியத்தினர் செந்தில் தொண்டமானுக்கு நன்றி தெரிவிப்பு-

ஐயப்பன் யாத்திரை செல்வதற்கான இலவச வீசா வழங்குவதற்கான ஏற்பாட்டை இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

20.05.2021 அன்று இந்து கலாச்சார அலுவலக்கத்தில் இடம்பெற்ற ஐயப்பன் குருமார்களுக்கான கலந்துரையாடலின் போது கொவிட் தொற்று காலப்பகுதியில் ஐயப்பன் யாத்திரை செல்வதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் விசா பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் அகில இலங்கை ஆனந்த ஐயப்பன் தேவஸ்தானத்தின் செயலாளர் திரு. கணேஷமூர்த்தி அகில இலங்கை சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் ரவிசாமி மற்றும் அகில இலங்கை சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியத்தினரால் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

செந்தில் தொண்டமானின்  கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து செந்தில் தொண்டமான் இது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார் இப் பேச்சுவார்த்தையின் பிரகாரம் இலவச வீசாவினை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதம் இன்று வழங்கப்பட்டது.

மேலும் ஒப்புதல் கடிதம் வழங்கியதை தொடர்ந்து ஐயப்பன் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வீசா வழங்கவதற்கான பதிவுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இலவச வீசா வழங்குவற்கான ஏற்பாடுகளை செய்து தந்தமைக்காக அகில இலங்கை சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியத்தினர் செந்தில் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles