ஐரோப்பாவில் படைகளை அதிகரிக்கிறது அமெரிக்கா

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பதில் நடவடிக்கையாக ‘அடிப்படை மாற்றம்’ ஒன்றுக்கு நேட்டோ இணங்கிய நிலையில், ஐரோப்பா எங்கும் அமெரிக்கா தனது படைகளை அதிகரிக்கவுள்ளது.

போலந்தில் நிரந்தர இராணுவ தலைமையகம் ஒன்று உருவாக்கப்படவிருப்பதோடு, அமெரிக்காவின் புதிய போர் கப்பல் ஸ்பெயினுக்கும் போர் விமானங்கள் பிரிட்டனுக்கும் தரைப் படையினர் ருமோனியாவுக்கும் அனுப்பப்படவுள்ளனர்.

எப்போதும் இல்லாத அளவுக்கு நேட்டோவின் தேவை இப்போது இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டணி பனிப்போருக்குப் பின்னர் மிகப்பெரிய மாற்றத்தை பெற்றுள்ளதாக நேட்டோவின் தலைவர் ஜேன்ஸ் ஸ்டொல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படையெடுப்புக்கு பதிலடி கொடுக்கும் புதிய திட்டத்தின்படி அடுத்த ஆண்டு 300,000க்கும் அதிகமான படையினர் உச்ச தயார் நிலையில் வைக்கப்படவுள்ளனர். அந்த எண்ணிக்கை தற்போது 40,000 ஆக உள்ளது.

மட்ரிட்டில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கடந்த புதனன்று உரையாற்றிய பைடன், ‘களம் – நிலம், வான் மற்றும் கடல் ஆகிய அனைத்து திசைகளிலும் நேட்டோ தம்மை பலப்படுத்தும்’ என்றார்.

Related Articles

Latest Articles