ஐரோப்பாவில் உள்ள ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அலை வீசுவதால் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அந்நாடுகளின் அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கோடை காலம். தற்போது பல்வேறு நாடுகளில் 40 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்சின் சில பகுதிகளுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக வெயில் காரணமாக பிரான்சில் 1,700 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன மற்றும் முக்கிய சுற்றுலா தலமான ஈபிள் கோபுரத்தில் ஏறுவது தடை செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, வெப்ப அலையால் எட்டுபேர்வரை உயிரிழந்துள்ளனர். காட்டு தீ சம்பவங்களும் பததிவாகி வருகின்றன.