ஐஸ் போதைப்பொருளுடன் பதுளையில் ஒருவர் கைது!

பதுளை, வினிதகம பகுதியில் நபரொருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நபரொருவர் ஐஸ் போதைப் பொருள் வைத்திருப்பதாக பதுளை பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய , பதுளை வினிதகம பகுதிக்கு விரைந்து சந்தேக நபரை அடையாளம் கண்டு குறித்த நபரை சோதனைக்கு உற்படுத்திய போது சந்தேக நபரிடம் இருந்து 11 கிராம் 670மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்

வினிதகம பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles