யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து மயானம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருபாலை இந்து மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்ற பெண் ஒருவர் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
மேற்படி பெண்ணிடம் இருந்து ஐஸ் போதைப்பொருளைப் பொலிஸார் மீட்டனர்.
கைதானா பெண் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரான பெண்ணைப் பொலிஸார் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியதைத் தொடர்ந்து அவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.