ஐஸ் போதைப்பொருளுடன் வவுனியாவில் ஒருவர் கைது

வவுனியா, தம்பனைச்சோலை பகுதியில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் போதைத் தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

அந்தப் பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுகின்றது என்று பொலிஸாருக்குக் கிடைத்த தகவலைய டுத்து வவுனியா தலைமை பொலிஸ் அதிகாரியின் வழிகாட்டலில் வவுனியா மது ஒழிப்பு பொலிஸ் பிரிவின் நிலையப் பொறுப்பு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் றிஸ்வி தலைமையில் பொலிஸ் சார்ஜன் களான கீர்த்தி ரத்தின, சொய்சா, டிசா நாயக்க, பொலிஸ் கொஸ்தாபர்களான குமார, விதுசன் ஆகியோரால் தம்ப னைச்சோலை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் விசேட சோதனை நடத் தப்பட்டது.

இதன்போது ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதனை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவ ரைப் பொலிஸார் கைது செய்தனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத் தப்படவுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles