ஐஸ், ஹொரோயினுடன் நுவரெலியா வந்த தம்பதியினர் கைது!

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தம்பதியினர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கினிகத்தேன, பொலிபிட்டிய – களுகல பகுதியல் உள்ள வீதி சோதனை சாவடியில் வைத்தே இவர்கள் சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தர்கா நகரை சேர்ந்த 25 வயது சந்தேக நபரும், அவரின் 20 வயதான கர்ப்பிணி மனைவியும் தர்கா நகரில் இருந்து நுவரெலியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் களுகல பகுதியில் உள்ள பொலிஸ் வீதி சோதனை சாவடியில் இவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டவேளை , அவர்கள் மறைத்து வைத்திருந்த போதைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 50 கிராம் ஹேரோயின் என்பனவே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

ஈசி கேஸ்மூலம் பணத்தை பெற்ற பின்னர் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் போதைப்பொருளை வைத்துவிட்டு அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சந்தேக நபர் தெரியப்படுத்துவார் என தெரியவந்துள்ளது.

இவர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தடுப்பு காவல் உத்தரவைப் பெற்று, இவர்களிடம் போதைப்பொருள் வாங்கும் நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles