கட்சியின் புதிய பயணம் மற்றும் நாட்டை மீட்பதற்கான தேசிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 05 ஆம் திகதி சிறப்புரையாற்றவுள்ளார் – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஐக்கிய தேசியக்கட்சி உதயமாகி செப்டம்பர் 06 ஆம் திகதியுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இதனைமுன்னிட்டு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ‘ஒன்லைன்’ ஊடாக உரையாற்றவுள்ளார்.
மாலை 5 மணி முதல் 6 மணிவரை பேஸ்புக், யூடியூப் உட்பட சமூகவலைத்தளங்களில் உரை ஒளிபரப்பாகும். ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் இளம் தலைமுறையினருக்காகவே தலைவர் உரையாற்றுகின்றார். இதன்போது கட்சியின் புதிய பயம் தொடர்பில் தெளிவுபடுத்துவார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. சமூகக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது. எதிர்காலம் பற்றிய எதிர்ப்பார்ப்பு இளம் தலைமுறையினருக்கு இல்லாது போயுள்ளது.
எனவே, சுகாதாரம் தொடர்பான தேசிய வேலைத்திட்டம், பொருளாதாரத்தை மீட்பதற்கான தேசிய வேலைத்திட்டம், அறிவுசார தேசிய வேலைத்திட்டம் உள்ளிட்டவற்றையும் அவர் முன்வைப்பார்.
நாட்டின் பொருளாதாரத்தை எம்மால் மீட்க முடியும். ஆனால் உயிரிழந்த மக்களை மீள பெறமுடியாது. எனவேதான் இன்னும் இரு வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு கேட்கின்றோம்.” – என்றார்.