ஐக்கிய தேசியக் கட்சியில் பதவி மாற்றங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் கட்சிக்குள் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் இந்த புதிய நியமனங்கள் முன்னாள் பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம் பெற்றுள்ளதுடன் அந்த நிகழ்விற்கு ரவி கருணாநாயக்க உட்பட கட்சியின் பல முக்கியஸ்தர்கள் சமுகமளிக்கவில்லை.
அர்ஜுன ரணதுங்க , நவீன் திசாநாயக்க போன்றோர் மேற்படி நியமனங்களில் அதிருப்தியை தெரிவித்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. அதேவேளை ஐ.தே. கட்சியின் புதிய தவிசாளராக முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் புதிய செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளதுடன் பொருளாளராக ஏ. எஸ். மிஸ்பா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கிணங்கமீண்டுமொரு பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகின்றது.
நவீன், அர்ஜுன போன்றவர்கள் சஜித் அணியில் இணையக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.