ஐ.தே.கவுக்கு தலைமையேற்குமாறு கருவுக்கு அழைப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை பொறுப்பேற்குமாறு முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அழைப்பு விடுத்துள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு தயார் என கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார்.

இதனையடுத்து தலைமைப்பதவியை பெறுவதற்கு ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன, நவீன் திஸாநாயக்க ஆகியோர் முயற்சித்துவருகின்றனர். இந்நிலையிலேயே சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கருவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் என கூறப்படுகின்றது.

எனினும், இது தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில் அவர் ஐ.தே.கவின் தலைமைப்பதவியை ஏற்பாரா என்பது கேள்விக்குறியே.

Related Articles

Latest Articles