ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது என தெரியவருகின்றது.
எதிர்வரும் 6 ஆம் திகதி இது பற்றிய அறிவிப்பு வெளியாகக்கூடும் என சிறிகொத்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழா எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க சிறை வைக்கப்பட்ட பின்னர் அவரின் விடுதலைக்குரிய அரசியல் சமரை ஐக்கிய மக்கள் சக்தியே முன்னின்று நடத்தி இருந்தது. ஏனைய எதிரணிகளும் ஓரணியில் திரண்டிருந்தன.
எனவே, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன உட்பட எதிரணி தலைவர்களுக்கும் ஐதேக மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொதுவானதொரு இடத்தில் கட்சி மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.