இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் இன்று (29) இரவு நடைபெறவுள்ளது.
உலகின் பிரசித்தி பெற்ற விளையாட்டு தொடர்களில் ஒன்றான ஐபிஎல் 2022 தொடா் கடந்த ஒன்றரை மாதங்களாக மும்பை, புனேயில் நடைபெற்றது. இந்நிலையில் கொல்கத்தாவில் தெரிவாகும் 1 மற்றும் வெறியேற்றம் போட்டிகள் நடைபெற்றன.
அகமதாபாதில் தெரிவாகும் இரண்டாவது போட்டி நிறைவடைந்தது.
இந்நிலையில், இன்று (29) நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் 2008 சாம்பியன் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன், முதன்முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது.
கடந்த 2008இற்கு பின் தற்போது தான் ராஜஸ்தான் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஆனால் அறிமுகமான முதல் தொடரிலேயே இறுதிச்சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது குஜராத் அணி.
குஜராத் 14 போட்டிகளில் 10 வெற்றியுடன் 20 புள்ளிகளையும், ராஜஸ்தான் ரோயல்ஸ் 14 போட்டிகளில் 9 வெற்றியுடன் 18 புள்ளிகளையும் பெற்று முதலிரண்டு இடங்களைப் பெற்றன.
