ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கொழும்பு ஹைலெவல் வீதி, மாளிகாவத்தை, மருதானை உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி இந்த ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்துள்ளது.
