இலங்கை மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (4) சந்தித்து பேச்சு நடத்தினார்.
சமூகநீதி, ஜனநாயகத்திற்கான பொதுவான பயணத்தின்போது இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு இவர் வெற்றிபெற்றார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலகட்டத்தில் சுயாதீன அணியாக செயற்பட்டார். விமல் தரப்புடனும் கூட்டணி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
