2022 ஆம் நிதியாண்டுக்கான, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் நேற்றிரவு ‘ஒன்லைன்’மூலம் நடைபெற்றது. இதன்போது நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்தார். இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதனபிரகாரம் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் முதலாம் வாசிப்புக்கென விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பரில் சபையில் முன்வைக்கப்படும்.