‘ஒமிக்ரோன்’ தாண்டவத்தை ‘பூஸ்டர்’ கட்டுப்படுத்தும்!

இலங்கை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் கொவிட் வகை வைரஸ் வேகமாகப் பரவாதென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் குழுவொன்று நடத்திய பரிசோதனையில் ஒமிக்ரோன் பற்றிய இந்தத் தகவலைக் கண்டுபிடித்துள்ளதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் நோய்த்தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்படவில்லை என்றாலும், பூஸ்டர் தடுப்பூசி மூலம் அதிலிருந்து பாதுகாப்பை பெற்றுக் கொள்ள முடியுமென்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த வைரஸ் குறித்து இன்னும் உறுதியான முடிவுக்கு வர முடியாதெனவும், அதனை ஆய்வு செய்வதற்கு அதிக நேரமும் தரவுகளும் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles