‘ஒமிக்ரோன்’ பிறழ்வு டெல்டாவைவிட 70 மடங்கு வேகமானது!

ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் மருத்து பீடத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், ‘ஒமிக்ரோன்’ பிறழ்வானது, டெல்டா பிறழ்வை விடவும் 70 மடங்கு வேகமாகக பரவக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.

ஒமிக்ரோன் பிறழ்வானது மனிதனின் சுவாசக் குழாயில் மிகவும் வேகமாகப் பரவி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்றும் இந்த ஆய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒமிக்ரோன் பிறழ்வின் இந்த இயல்பே டெல்டாவை விட வேகமாக பரவுவதற்கு வழிவகுத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இது கொவிட் வைரசுடன் ஒப்பிடுகையில் நுரையீரலில் பரவும் வீதம் குறைவு என்பதால் நோயின் தீவிரத்தன்மை ஓரளவு குறைவாகும்.

Related Articles

Latest Articles