ஒருநாள் கிரிட்கெட் போட்டிக்கும் விடை கொடுக்கிறார் டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் முடிவடைந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் முன்னர் அறிவித்தார்.

சிட்னியில் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிதான் அவரது கடைசி போட்டியாகும்.

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. தொடக்க வீரரான வார்னர் சிறப்பான பங்களிப்பை அணிக்கு வழங்கினார்.

161 ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரத்து 932 ஓட்டங்கள் குவித்துள்ளார். ஒரு நாள் போட்டியில் 179 ஓட்டங்கள் அவரது அதிகபட்ச ஓட்டங்களாகும். . 22 சதங்கள், 33 அரைசதங்கள் அடித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles