இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் நேற்று நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணிக்கு லிட்டன் தாஸ் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தாலும், அடுத்து களமிறங்கிய வீரர்கள் சிறப்பாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தனர். 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பங்களாதேஷ் அணி 286 ரன்களைப் பெற்றது.
இலங்கை தரப்பில் சிறப்பாக பந்து வீசிய வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 287 ஓட்டங்களால் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்க பெர்னாண்டோ டக் அவுட்டானார். குசல் மெண்டிஸ் ஓட்டங்களும், சமரவிக்ரம ஒரு ஒட்டமும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் பொறுப்புடன் ஆடிய பெத்தும் நிஸ்ஸங்க சதமடித்து அசத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய அசலங்க அரை சதம் கடந்தார்.
அசலங்கா 91 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை ஆட்டமிழந்தார். இந்த நிலையில் இலங்கை அணி 47.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பங்களாதேஷ் – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள்போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகின்றது.