இலங்கை மற்றும் ஆஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, 174 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 281 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் தனது 5ஆவது ஒருநாள் சர்வதேச சதத்துடன், 101 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். சரித்த அசலங்க 78 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
281 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்ரேலியா அணி இலங்கையின் சுழல்பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாது வெறும் 107 ஓட்டங்களுக்குள் சலக விக்கெட்டுகளை இழந்தது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இலங்கை வெற்றிக்கொண்டுள்ளது.