ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜயசிறி, எம்.பி. பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர், எம்.பி. பதவியை துறப்பதாக அறிவித்தார்.
பதவி விலகல் கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
” மக்கள்கோரும் நாடாளுமன்றம் அமைய தேர்தல் நடத்தப்பட வேண்டும். கட்சியுடன் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஒரு தந்தைபோலவே கட்சி தலைவர் சஜித் பிரேமதாச என்னை வழி நடத்தினார். ” -என்றார்.
ஐக்கிய மக்கள் சக்திதான் எனது கட்சி. சஜித்தான் நாட்டை சிறப்பாக நிர்வகிக்கக்கூடியவர். மக்கள் விரும்பினால் மீண்டும் அரசியலுக்கு வருவேன் எனவும் அவர் கூறினார்.










